ரேஷ்மாவின் புதிய அவதாரம் : களமிறங்கும் “தளபதியின் சொந்தங்கள்” – வேற லெவல் சீரியலாக மாறும் கிழக்கு வாசல்
கிழக்கு வாசல் என்ற புதிய சின்னத்திரை நாடகம் ஒன்று விரைவில் ஒளிபரப்பாக உள்ளது, பிரபல மூத்த நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் இந்த நாடகத்தை தயாரிப்பதோடு இதில் நடிக்கவும் உள்ளார். மேலும் தளபதி விஜயின் தந்தை S.A சந்திரசேகர் அவர்களும் இந்த நாடகத்தில் நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே நாடகங்களில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா முரளிதரனும் இந்த சீரியலில் நடிக்கிறார், கிழக்கு வாசல் பற்றி நடிகை ரேஷ்மா பேசுகையில், “ராதிகா சரத்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர் சார் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் பழகுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சீரியலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமானது, நிச்சயமாக, இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு பார்வையாளர்களையும் மகிழ்விக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த நாடகத்தில் பிரபல நடிகரும் தளபதியின் மிக நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் வெங்கட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பல உச்ச நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கும் இந்த நாடகத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
