கொடநாடு கொலை : சசிகலாவை விசாரிக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு காவலாளி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

today news in tamil

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். எல்லா விவரமும் சசிகலா இளவரசிக்குத் தான் தெரியும் என்பதால் அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த வழக்கு மீண்டும் நேற்று (நவம்பர் 12) நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் காவல்துறை தரப்பில் பதிலளிக்கக் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.