கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் முடிவுகள் : திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

கொல்கத்தா மாநகராட்சியின் பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக (கடந்த ஆண்டு மே) முடிந்தபோதும் கொரோனா பரவலால் தேர்தல் தாமதமாக அறிவிக்கப்பட்டது. பிறகு 144 இடங்களைக் கொண்ட கொல்கத்தா மாநகராட்சியில் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி தேர்தல்கள் நடத்தப்பட்டன.

கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் முடிவுகள் 2021க்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. மொத்த வாக்குப்பதிவு 63% அதிகமாக இருந்தது. உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பெற உள்ளது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கொல்கத்தா மாநகராட்சியின் 135 இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றதால், கட்சி உறுப்பினர்கள் நகரம் முழுவதும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். பாஜக 3, CPM 3, காங்கிரஸ் 2, சுயேட்சை 1 என முன்னிலை வகிக்கிறது.

Advertisement