• Home
Wednesday, June 25, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

குல தெய்வம் என்றால் என்ன? மஹா பெரியவா விளக்கம் !!

by Tamilxp
August 11, 2024
in ஆன்மிகம்
A A
குல தெய்வம் என்றால் என்ன? மஹா பெரியவா விளக்கம் !!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

மகா பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி மகா பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை.முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் மகா பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி, சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாமகுடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

மகா பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார். குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர். சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?” ‘ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

இதையும் படிங்க

வேலையில் வெற்றி அடைய வேண்டுமா? தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை செய்யவும்

வேலையில் வெற்றி அடைய வேண்டுமா? தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை செய்யவும்

August 11, 2024
தேவாதிராஜன் கோவில் வரலாறு

தேவாதிராஜன் கோவில் வரலாறு

August 8, 2024
aanmeegam in tamil

துளசி செடியை எந்த திசையில் வைத்தால் பண வரவு கிடைக்கும்?

December 18, 2024
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் வரலாறு

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் வரலாறு

August 9, 2024
ADVERTISEMENT

உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?” ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.” அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.” ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?” அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?” நான் அப்படிச் சொல்லவே இல்லையே!” அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!” ‘காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?” ‘நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார். அவரும் ஒரு பத்து நாள் கழித்து, “சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?” “அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!” அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

“சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து மகா பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கைபிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட!

ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள்.காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும். இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”

மகா பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்! அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது? “ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.”

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.

இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?” – மகா பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது !

ShareTweetSend
Previous Post

கற்றாழை சாற்றை அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனைகள் வரும்

Next Post

அரிசி உணவுகளை தவிர்ப்பதால் உடல் எடை குறையுமா?

Related Posts

நல்ல சகுனங்கள் எவை தெரியுமா?
ஆன்மிகம்

நல்ல சகுனங்கள் எவை தெரியுமா?

June 22, 2025
திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு

June 15, 2025
திருவண்ணாமலை கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருவண்ணாமலை கோவில் வரலாறு

June 15, 2025
ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?
ஆன்மிகம்

ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?

June 15, 2025
பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்
ஆன்மிகம்

பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்

June 15, 2025
மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்
ஆன்மிகம்

மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்

June 9, 2025
Next Post
அரிசி உணவுகளை தவிர்ப்பதால் உடல் எடை குறையுமா?

அரிசி உணவுகளை தவிர்ப்பதால் உடல் எடை குறையுமா?

அடிவயிற்று கொழுப்புகள் குறையணுமா? இதை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

அடிவயிற்று கொழுப்புகள் குறையணுமா? இதை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

இரவில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் தூக்கம் வருமா?

இரவில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் தூக்கம் வருமா?

ADVERTISEMENT
கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?
லைஃப்ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை பாதுகாப்பானதா? – டாக்டர்கள் சொல்வது என்ன?

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஸ்கேன்கள் எடுக்கும்போது...

by Tamilxp
June 24, 2025
12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
லைஃப்ஸ்டைல்

12 விதமான நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ – புதிய ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

குங்குமப்பூ (Saffron) என்பது இந்தியர்களுக்கு மிகவும்...

by Tamilxp
June 24, 2025
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

புதினா இலைகள் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்,...

by Tamilxp
June 23, 2025
யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?
லைஃப்ஸ்டைல்

யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?

யோகா உடல் மற்றும் மனதுக்கு பல...

by Tamilxp
June 22, 2025
நீங்கள் யார்? உங்கள் உடல் மொழி கூரும் உண்மைகள்
தெரிந்து கொள்வோம்

நீங்கள் யார்? உங்கள் உடல் மொழி கூரும் உண்மைகள்

December 15, 2024
தூங்கும்போது நமது மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

தூங்கும்போது நமது மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

December 18, 2024
வண்ணத்துப்பூச்சி பற்றி சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

வண்ணத்துப்பூச்சி பற்றி சில தகவல்கள்

March 9, 2025
மான்கள் பற்றி சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

மான்கள் பற்றி சில தகவல்கள்

March 9, 2025
இறந்தவரின் PAN கார்டை ரத்து செய்யாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?
தெரிந்து கொள்வோம்

இறந்தவரின் PAN கார்டை ரத்து செய்யாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ?

May 29, 2025
குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம்

குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

May 29, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.