பாஜகவில் இணைந்த குஷ்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய குஷ்பு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். தற்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு வேட்புமனு தாக்கல் செய்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக குஷ்பு போட்டியிடுகிறார். திமுக சார்பில் மருத்துவர் எழிலனும் போட்டியிடுகிறார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் என்றும் கூறினார். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு விவரங்களும் வெளியாகியுள்ளது.

குஷ்புவின் சொத்து மதிப்பு

Advertisement

ரூபாய் 33,12,000 மதிப்புள்ள Toyota Fortuner கார்
ரூபாய் 5,50,000 மதிப்புள்ள மாருதி ஸ்விப்ட்
ரூபாய் 3,42,00,000 மதிப்புள்ள 8.55 கிலோ தங்க நகைகள்
ரூபாய் 17,99,87,500 மதிப்புள்ள வீடுகள், நிலங்கள் இருப்பதாகவும் வேட்புமனு விவரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது போக வங்கிகளில் 3,45, 13, 950 ரூபாய் கடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.