குட்டி ஸ்டோரி திரை விமர்சனம்

நான்கு விதமான காதல் கதைகளின் தொகுப்புதான் இந்த குட்டி ஸ்டோரி

விஜய்சேதுபதி, கௌதம்மேனன், வினோத் கிஷன், அமலாபால் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கௌதம் மேனன், வெங்கட்பிரபு, விஜய், நலன் குமாரசாமி ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர்.

எதிர்பாரா முத்தம்

Advertisement

இயக்கம் – கவுதம் மேனன்
இசை – கார்த்திக்
நடிப்பு – கவுதம் மேனன், அமலா பால், வினோத் கிஷன், ரோபோ சங்கர்.

கௌதம் மேனன் தனது நண்பர்களுடன் கல்லூரி காலத்து காதலைப்பற்றி பேசுகிறார்கள். அப்போது அமலா பால் உடனான நட்பு பற்றி பெருமிதமாகச் சொல்கிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு அமலாபால் கவுதம் மேனனை ஆசைப்பட்டு சந்திக்கிறார். தன் மனதில் இருப்பதை கடிதமாக எழுதிக் கொடுக்கிறார். அந்த கடிதத்தில் என்ன இருந்தது என்பதுதான் கிளைமேக்ஸ்.

கௌதம் மேனனின் இளமைப்பருவ தோற்றத்தில் வினோத் கிஷன் நடித்திருக்கிறார். நாயகியாக வரும் அமலாபால் கல்லூரி மாணவியாக சிறப்பாக நடித்திருக்கிறார். கௌதம் மேனன் வழக்கம்போல ஆங்கிலம் கலந்து பேசும் நாயகனாக வலம் வந்துள்ளார்.

kutty story thirai vimarsanam

அவனும் நானும்

இயக்கம் – விஜய்
இசை – மது
நடிப்பு – அமிதாஷ் பிரதான், மேகா ஆகாஷ்

இந்த கதையில் அமிதாஷ், மேகா ஆகாஷ் இருவரும் காதலர்கள். மேகா ஆகாஷ் மருத்துவ பரிசோதனை செய்கிறார். அதில் தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக முடிவுகள் வருகிறது. கர்ப்பத்தைக் கலைக்குமாறு தோழி ஆரியா (ஸ்ருதி) ஆலோசனை கூறுகிறார். கருவை கலைக்கும் முயற்சி எடுக்கும்போது மேகாவின் காதல் அமிதாஷ் விபத்தில் மரணமடைந்ததாக தெரியவருகிறது. இதனால் கருவை கலக்காமல் வீட்டிற்கு தெரியாமல் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் அவருடைய தோழி அவரைக் கேட்காமலேயே குழந்தையை ஒரு அனாதை ஆசிரமத்தில் விட்டு விடுகின்றார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கிளைமாக்ஸ்.

மதுவின் இசை, அரவிந்த் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலம் சேர்க்கிறது.

லோகம்

இயக்கம் – வெங்கட் பிரபு
இசை – பிரேம்ஜி அமரன்
நடிப்பு – வருண், சங்கீதா, சாக்ஷி அகர்வால், லுத்புதீன்

லோகம் இந்த கதையின் நாயகன் வருண் லோகம் என்ற வீடியோ கேமில் புதிதாக விளையாட ஆரம்பிக்கிறார். அந்த விளையாட்டில் பெண்ணொருவர் வந்து விளையாடுகிறார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது. பிறகு தனியாக விளையாடும் வருண் கேமில் வெற்றி பெறுகிறார். அந்த அனுபவத்தை ஒரு யூடியூப் சேனலில் பகிர்ந்துகொள்கிறார். முகம் தெரியாத அந்தப் பெண்ணுடன் அன்பை விவரிக்கிறார். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த கதையின் கிளைமாக்ஸ்.

ஆடல் பாடல்

இயக்கம் – நலன் குமாரசாமி
இசை – எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
நடிப்பு – விஜய் சேதுபதி, அதிதி பாலன்

இந்த குட்டி ஸ்டோரிகள் மூன்று யதார்த்தமான காதல் கதைகளை காட்டியவர்கள் ஒரு கள்ளக்காதலையும் காட்ட முடிவெடுத்தது கொஞ்சம் அதிர்ச்சிதான். இருந்தாலும் இந்த கதை சரியான பாடம் என்று சொல்லலாம்.

விஜய் சேதுபதி, அதிதி பாலன் இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. விஜய் சேதுபதி தனது முன்னாள் காதலி ஒருவருடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுகிறார். இந்த விஷயம் மனைவிக்கு தெ ரிந்ததால் விஜய் சேதுபதி அதிர்ச்சி அடைகிறார். திருமணத்திற்கு பிறகு தானும் தன்னுடைய முன்னாள் காதலனுடன் தவறு செய்து விட்டதாக கூறி விஜய்சேதுபதிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை தருகிறார் அவருடைய மனைவி. அதன்பிறகு இவர்களுடைய கணவன் மனைவி உறவு என்ன ஆனது என்பதுதான் கிளைமாக்ஸ்.

ஹெட்வின் லூஸ் விஸ்வநாத் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியுள்ளார். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் அற்புதம். விஜய் சேதுபதியும், அதிதி பாலனும் போட்டி போட்டு நடித்துள்ளனர். நலன் குமாரசாமியின் இந்த ஒரு குறும்படம் மட்டுமே தனித்து கம்பீரமாக நிற்கிறது.