Search
Search

அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில்

Arulmigu Lakshmi Narasimmaswamy Temple, Sholinghur

ஊர் -சோளிங்கர்

மாவட்டம் -வேலூர்

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர்– யோக நரசிம்மர்

தாயார் -அமிர்தவள்ளி

தீர்த்தம்– அமிர்த தீர்த்தம், தக்கான் குளம்

திருவிழா – கார்த்திகை திருவிழா; 5 ஞாயிறுகிழமைகளில் சித்திரை பிரம்மோற்சவம் பத்து நாள். வைகாசி- நரசிம்ம ஜெயந்தி, காஞ்சி கருட சேவை, ஆடி -திருவாடிப்பூரம் உற்சவம. ஆவணி- திருப்பவித்ரோட்சவம். புரட்டாசி- நவராத்திரி. ஐப்பசி -மணவாளமாமுனி உற்சவம். மார்கழி -பகல் பத்து ராப்பத்து உற்சவம். தை -தைப்பொங்கல். மாசி -தொட்டாச்சாரியார் உற்சவம் .

திறக்கும் நேரம்– மலைக்கோயில்களில் காலை 8 மணி முதல் மாலை 5;30மணி வரை தரிசனம் செய்யலாம்

Arulmigu Lakshmi Narasimmaswamy Temple, Sholinghur

தல வரலாறு;

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம். பக்த பிரகலாதனுக்கு காட்சி கொடுத்த நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என சப்தரிஷிகள் இங்கு வந்து தவமிருந்தனர். அதற்கு ஒரு காரணம் இருந்தது. விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிதுநேரம் நரசிம்மரை வழிபட்ட பின் பிரம்மரிஷி பட்டம் பெற்றார்.

எனவே அதேபோல் தாங்களும் உடனடியாக பெருமாளின் தரிசனம் வேண்டி இங்கு வந்து தவம் புரிந்தனர். ராமாவதாரம் முடித்த பின் ஆஞ்சநேயரிடம் இந்த கோயில் மலையில் தவம் புரியும் ரிஷிகள், அரக்கர்களால் துன்பப்படுகிறார்கள் அவர்களது இன்னல்களைப் போக்கு என ஆணையிட்டார்.

அவ்வாறே செய்த ஆஞ்சநேயர் ‘காலன், ‘கேயன் என்ற அரக்கர்களிடம் சண்டையிட்டு முடியாமல் போனதால், ராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன்மூலம் ரிஷிகளை காப்பாற்றினார். பின் ரிஷிகளின் தவத்தை மெச்சி பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார்.

Arulmigu Lakshmi Narasimmaswamy Temple, Sholinghur

அருகில் உள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார் அஞ்சநேயர். இத்தலத்தில் 24 நிமிடம் இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். சுவாமி ஸ்ரீ சாளக்கிராம மாலை அணிந்துள்ளார், இவரது வடிவத்தை சிலா வடிவம் என்கின்றனர்.

தாயார் அமிர்தவல்லி வேண்டும் வரம் தருபவராக அருள்பாலிக்கிறார். உற்சவருக்கென தனிக்கோயில் அமைந்திருப்பது இங்கு மட்டும்தான். இத்தலத்து பெருமாள் ஒரே கல்லால் ஆன மலை மீது அருள்பாலிக்கும் தன்னை 1500 படிகள் ஏறி வந்து தரிசித்தாலே பலன் தந்து விடுவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

இங்கு பிறந்த “தொட்டாச்சாரியார்’ ஆண்டுதோறும் காஞ்சி வரதராஜ பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த வேளையில் ஒரு முறை உடல் நிலை சரியில்லாத போகவே வரதராஜனை தரிசிக்க முடியவில்லை. இங்குள்ள தக்கான் குளத்தில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து கண்ணீர் சிந்தினார்.

உடன் பெருமாள் கருட வாகனத்தில் இங்குள்ள நரசிம்மர் கோலத்தில் தரிசனம் தந்தார். இதன் நினைவாக பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி தொட்டாச்சாரியருக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்.

பராங்குச சோழன் கட்டிய மூன்றாம் நூற்றாண்டு கோயில் இது இத்தளத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோகாசனத்தில் அமர்ந்திருப்பது தனிச்சிறப்பு. இம்மலையில் உள்ள மூலிகை மரங்களால் இங்கு வரும் பக்தர்களுக்கு ரத்தக் கொதிப்பு, இதய நோய் பிரச்சினை உள்ளவர்கள் குணமாகி விடுவதாக சொல்லப்படுகிறது.

இத்தலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி தீரும். இங்கு, நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் கூட நீங்கும் என்பது ஐதீகம்.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

You May Also Like