காட்டுமிராண்டி கூட்டம் – கந்தசஷ்டி கவசம் சர்ச்சைக்குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்

சமீப காலமாக சர்ச்சை பதிவுகளும், வீடியோக்களும்அதிகம் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை தரக்குறைவாக பேசுவது, மத உணர்வை புண்படுத்துவது போன்ற பதிவுகள் தற்போது அதிகம் பரவிவருகிறது.

இந்நிலையில் யூ டியூபில் ‘கருப்பர் கூட்டம்’ என்ற பெயரில் சேனல் ஒன்று உள்ளது. அதில் ஆபாச புராணம் என்ற பெயரில், கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சேனலை தடை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் ட்விட்டரில் அந்த வீடியோவை பார்த்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கண்டதை தெரிவித்தார். இது கருப்பர்கள் கூட்டம் அல்ல, காட்டுமிராண்டி கூட்டம் என கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.