மொய்தீன் பாய் மாஸ் என்ட்ரி.. ஐஸ்வர்யா இயக்கத்தில் விரைவில் வெளியாகும் லால் சலாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிரூத் இசையில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ப்ரோமோ ஒன்று வெளியானது.
மேலும் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி இந்த படம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் தனது அடுத்த திரைப்படமான லால் சலாம் திரைப்படத்திற்கான பணிகளில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். லால் சலாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது, “மொய்தீன் பாய்” என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். நேற்று இந்த படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்து மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.