ஐஸ்கிரீம் வாங்குவதற்காக ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்!

ஐஸ்கிரீம் வாங்குவதற்காக நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள டிஸ்டேல் நகரில் சுமார் 3000 பேர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த மாதம் 31ஆம் தேதி சிவப்பு வண்ணம் பூசப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டது. இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த மாகாணத்தின் மருத்துவ விமான ஆம்புலன்சின் அதே வண்ணம் அந்த ஹெலிகாப்டருக்கும் பூசப்பட்டிருந்ததால், அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர்.

Advertisement

ஹெலிகாப்டரை இயக்கிய பைலட், ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பியதால் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் ஹெலிகாப்டரை தரையிறக்கியுள்ளார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.