மனோபாலாவின் இறுதி நிமிடங்கள்.. தந்தைக்கு பிடித்த பாடலை பாடிய மகன்!

மனோபாலா, தமிழ் திரையுலகில் இவரை வெறுத்தவர் என்று ஒருவர் கூட இல்லை. அந்த அளவிற்க்கு அனைவரையும் நேசிக்கும் ஒரு உன்னத மனிதர். தஞ்சையை அடுத்த ஒரு கிராமத்தில் பாலசந்தர் என்ற பெயரோடு பிறந்து வளர்ந்தவர்.
பரதம் மற்றும் வீணை கலைஞராக திகழ்ந்த மனோபாலா, இயக்குநர் பாரதிராஜாவின் “புதிய வார்ப்புகள்” என்ற படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்தார். அதன் பிறகு பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி, 1982ம் ஆண்டு வெளியான “ஆகாய கங்கை” என்ற படத்தின் மூலம் இயக்குநரக உருவெடுத்தார்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான “ஊர் காவலன்” திரைப்படம், இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான். இறுதியாக ஜெயராம் நடிப்பில் வெளியான “நைனா” என்ற படத்தை இயக்கியிருந்தார் மனோபாலா. இயக்குநராக மட்டும் இல்லாமல் மிகசிறந்த குணச்சித்திர நடிகராகவும், காமெடியனாகவும் தமிழ் திரையுலகில் வலம்வந்தார்.
கடந்த சில நாட்களாகவே சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த மனோபாலா, கடந்த மே 3ம் தேதி காலமானார். அவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு அவருடைய குடும்பத்தார், சுயநினைவின்றி இருந்த மனோபாலாவை உற்சாகப்படுத்தும் வீடியோ ஒன்று அவருடைய மனோபாலா வேஸ்ட் பேப்பர் எ Youtube சேனலில் வெளியாகியுள்ளது.
அதில் அவருடைய மகன் அவருக்காக பாடல் படுவதும், அவருடைய குடும்பத்தார் அருகில் இருந்து உற்சாகப்படுத்துவதும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அய்யா மனோபாலா அசைவின்றி அதை ரசிப்பது காண்போரை கண்கலங்க செய்துள்ளது.