in

நேரடியாக OTT-ல் வெளியாகும் லாரன்ஸ் இயக்கிய திரைப்படம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என்று பன்முகத்தன்மைக்கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

இவர் இயக்கிய காஞ்சனா என்ற திரைப்படம் பெரும் வெற்றியை பெற்ற பிறகு, அடுத்தடுத்து நிறைய பாகங்களை எடுக்கத் தொடங்கினார்.

காஞ்சனா தான் பல்வேறு தரப்பிடம் லாரன்சை எடுத்து சென்றது. இந்நிலையில், இந்த திரைப்படம் இந்தியில் லஷ்மி பாம் என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தையும், லாரன்ஸ் தான் இயக்கி வருகிறார்.

கொரோனா லாக் டவுன் காரணமாக இந்த திரைப்படம் ஒடிடியி;ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். அக்ஷய் குமார் நடித்துள்ள இந்த திரைப்படம், பெரிய அளவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.