in

3-வது திருமணம் குறித்து பேசிய லஷ்மி ராமகிருஷ்ணன்..! கேவலப்படுத்திய வனிதா..!

இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்ற நபரை 3-வதாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

இந்த திருமணம் குறித்து, ஒரு சிலர் எதிர்ப்பும், பலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த திருமணத்தில் மற்றொரு பிரச்சனை வந்துள்ளது.

அதாவது, பீட்டர் பால் தனது முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமலேயே வனிதாவை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த லஷ்மி ராமகிருஷ்ணன், இப்போது தான் செய்தியை அறிந்தேன். பீட்டருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

ஆனால், அவர் முறையாக விவாகரத்து வாங்கவே இல்லை. படித்தவர்கள், நல்ல புகழ் உள்ளவர்கள் எப்படி தான் இதுபோன்ற தவறுகளை செய்கிறார்கள்.

மேலும், இந்த திருமணம் நடப்பதற்கு முன்பே தடுக்காமல், முடிந்த பிறகு பாலின் முதல் மனைவி தடுத்திருக்கிறார் என்று லஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த வனிதா, நீங்க போய் ரேப் மற்றும் சூசைட் பத்தி பேசுங்க. மத்தவங்க அனுமதி இல்லாம, அவங்களோடு குடும்ப விஷயம் பத்தி பேசாதீங்க என பங்கமாக விமர்சித்துள்ளார்.