தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்..!

லிப்ஸ்டிக்கில் உள்ள சில நச்சுப்பொருட்கள் உடல் உறிஞ்சுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த ஆபத்தை உணராமல் இன்று பல பேர் லிப்ஸ்டிக்கை அதிகம் உபயோகிக்கிறார்கள். எனவே லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன் அதில் இருக்கும் பொருட்களை கவனியுங்கள். அவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது உதடுகளில் அரிப்பு ஏற்பட்டால் அதனை அஜாக்கிரதையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது ஒவ்வாமை பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். லிப்ஸ்டிக்கில் பிஸ்மத் ஆக்ஸி குளோரைடு என்கிற ரசாயனம் இருக்கிறது. இது புற்றுநோய் ஆபத்தை உருவாக்கும். எனவே எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

lipstick dangerous for health

லிப்ஸ்டிக் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Advertisement

லிப்ஸ்டிக்கில் அதிக அளவு காட்மியம் இருப்பதால் சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம்.மேலும் இந்த நச்சுத்தன்மை காரணமாக வயிற்று கட்டிகளும் உருவாகலாம்.

லிப்ஸ்டிக்கில் உள்ள பெட்ரோ கெமிக்கல்கள் நாளமில்லா சுரப்பி அமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே லிப்ஸ்டிக்கை அளவாக பயன்படுத்துங்கள். அல்லது முழுவதுமாக தவிர்த்து விடுங்கள்.