பொங்கல் பரிசு தொகுப்பில் செத்துப் போன பல்லி – மக்கள் அதிர்ச்சி

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் சமையலுக்கு பயன்படும் புளியில் இறந்த நிலையில் பல்லி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திருக்குளம் பகுதியை சேர்ந்த நந்தன் என்பவர் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கியுள்ளார். அதை பிரித்து பார்த்த போது பரிசுத் தொகுப்பில் இருந்த ’புளி’ பாக்கெட்டில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த அதிர்ச்சியில் அவருக்கு வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வாழங்கி வரும் பரிசுப் பொருட்கள் தரமற்றதாக உள்ளதாக எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கூறிவரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.