ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி திரை விமர்சனம்

இயக்குனர் கே.ஆர் பிரபு ஆர்.ஜே. பாலாஜியை கதாநாயகனாக வைத்து எடுத்த படம்தான் எல்.கே.ஜி. இந்த படத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தின் அதிகாரியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் நாஞ்சில் சம்பத், ஜே.கே ரித்தீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

லால்குடியின் வார்டு கவுன்சிலரான ஆர்.ஜே.பாலாஜி, தனது தொகுதியில் வரும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு CM ஆக வேண்டும் என்பதே அவரது ஆசை. அதற்கு தடையாக உள்ளவர்களை அழிக்க ஆர்.ஜே.பாலாஜி செய்யும் தில்லு முல்லு வேலைகள்தான் படத்தின் கதை.

தமிழில் பல அரசியல் படங்கள் வந்திருந்தாலும் ஆர்.ஜே.பாலாஜியின் இந்த படம் சிறப்பான வரவேற்பு. வைகை ஆற்றில் தெர்மாகோல் அனுப்பியது, ஹாஸ்பிட்டல் பில் ஒரு கோடி என்று சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை ஒன்று விடாமல் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இது அரசியலை கலாய்த்து எடுக்க பட்ட படம் என்று நமக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தாலும் தியேட்டரில் பார்க்கும் போது அது வேற லெவல்.

ஆர்.ஜெ பாலாஜியின் சேட்டைகளோடு ஆரம்பிக்கும் இந்த படம் ஒரு கட்டத்தில் சீரியஸாக போகிறது. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நினைத்தால் எவ்வளவு பெரிய ஆளையும் வீழ்த்தி விட முடியும். அதே நேரத்தில் சாதாரண வார்டு கவுன்சிலரை கூட முதல்வராக்கி விட முடியும் என்ற உண்மையை இந்த படம் சொல்லியிருக்கிறது.

மக்களால் தான் ஒரு மோசமான அரசியல்வாதி உருவாகிறான் என்ற கருத்தையும், அரசியலை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் நேர்மையான சுயேட்சை வேட்பாளர்களை இந்த மக்கள் கண்டு கொள்வதில்லை, என்ற கருத்தையும் இந்த படத்தில் மிக அழுத்தமாக கூறியுள்ளனர். இந்த படத்தை அமைதிப்படை 2.0 என்றே சொல்லலாம்

மொத்தத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்.