இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தற்போதைய நாடு தழுவிய ஊரடங்கு மே 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த பின்னர், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் மற்றும் சோலன் மாவட்டங்கள் ஒரு மாதத்திற்கு கொரோனா வைரஸ் ஊரடங்குடன் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அங்கு 214 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 63 பேர் வரை குணமடைந்துள்ளனர், 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதில், மாநிலத்தின் மொத்தத பாதிப்பு எண்ணிக்கையில் ஒரு பகுதி ஹாமிர்பூர் மாவட்டத்திலே பதிவாகியுள்ளது.

இதுவரை ஹாமிர்பூர் மாவட்டதில் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சோலானில் 21 பேர் உயரிழந்துள்ளனர்.

Advertisement

மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி, விமான போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்கி வரும் நிலையில், இந்த ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.