ஆண்களின் அழகுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. வாலிபர்களாக இருக்கும்போது தொப்பை இல்லாமல் அழகுடன் காணப்படும் இளைஞர்கள் திருமணமானதும் நல்ல உணவால் தொப்பை உருவாகிவிடும்.
இந்த தொப்பை, ஆண்களின் அழகை குறைப்பதோடு ஆரோக்கியத்திற்கும் பிரச்சனையை உருவாக்குகிறது. தொப்பை உருவான பிறகு வேகமாக நடக்க முடியாது, பஸ்களில் ஏறி இறங்க சிரமப்படுவார்கள்.
வீட்டில் அல்லது அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் தொப்பையின் அளவு அதிகரித்தபடியே இருக்கிறது. அலுவலகத்திற்கு சீக்கிரம் செல்ல வேண்டுமென்பதால் உடற்பயிற்சி செய்ய நேரமில்லாமல் போகிறது. இப்படி பல காரணங்களால் தொப்பை உருவாகிறது.
உடலுக்கு குறைவான வேலை கொடுக்கும்போது அது எல்லா உறுப்புகளையும் பாதிக்கிறது. அதில் நமது கண்களுக்கு தொப்பை மட்டும் பெரிதாக தெரியும். அறுவை சிகிச்சை மூலமாக தொப்பையை குறைப்பது நல்லதல்ல.
தினமும் ஒரு கப் காய்கறி சாலட் சேர்த்துக்கொள்ள வேண்டும். தோலுடன் சாப்பிடக்கூடிய பழங்களை தோலுடன் சாப்பிட வேண்டும். அது வயிற்றில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.
ஆப்பிள் பழங்கள் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தோலில் மெழுகு பூசப்படும். எனவே அதை சாப்பிடுவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் 2 அல்லது 3 நிமிடம் ஊற வைத்து கழுவி சாப்பிட வேண்டும்.
சரி தொப்பையை உடற்பயிற்சி செய்யாமல் குறைப்பது எப்படி இதோ சில வழிகள்
உணவில் சேர்க்கும் உப்பின் அளவை குறையுங்கள்
சிப்ஸ் ஊறுகாய் வகைகளை அதிகம் சாப்பிட வேண்டாம்
உடலில் இயற்கையாக இருக்கும் தண்ணீர் தன்மையை குறைக்கும் விதத்திலான மருந்துகளை உபயோகிக்க வேண்டாம்
பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்றவைகளில் சாப்பாட்டில் சேர்க்காமல் இருப்பது நல்லது
எப்போதும் அரை வயிறு அளவுக்கு சாப்பிட்டால் போதும் மூச்சு விட முடியாமல் சிரமப்படும் அளவிற்கு சாப்பிட்டால் தொப்பை அதிக தொல்லை தரும்
உருளைக் கிழங்கு கடலை பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பதை பெருமளவு குறையுங்கள் அல்லது சாப்பிடாமல் விட்டுவிடுங்கள்
பேக்கரியில் விற்கப்படும் பொருட்களை அறவே ஒதுக்க வேண்டும் முடியாவிட்டால் அளவோடு உண்ண வேண்டும்.
முடிந்தவரை உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டு சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அளவாக சாப்பிட்டால் ஆரோக்கியம்.
இருந்தாலும் உடல் ஆரோக்கியம் மென்மேலும் வளர சிறு உடற்பயிற்சி அவசியம். குறைந்தபட்சம் நடை பயிற்சி எடுப்பது நல்லது.