in

பிரபல பாடலாசிரியர் அன்வர் சாகர் காலமானார் – சோகத்தில் பாலிவுட்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு பாடல்களை எழுதி 90களில் பிரபலம் ஆன பாடலாசிரியர் அன்வர் சாகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 70.

சமீபத்தில் பாலிவுட் இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான வாஜித் கான் சிறுநீரக பிரச்சனை காரணமாக மரணமடைந்தார்.

கொரோனா வைரஸின் தாக்கம் ஒரு இருக்க மற்றொரு புறம் பாலிவுட் பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.