வைகை புயல் குரலில் ராசா கண்ணு.. இசை புயல் இசையில் இன்று வெளியாகும் First Single!

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் பல நூறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தது மட்டும் அல்லாமல் அந்த அனைத்து கதாபாத்திரங்களையும் இன்றளவும் மக்கள் கொண்டாடும் வண்ணம் நடித்து வரும் ஒரு மாபெரும் நடிகர் தான் வைகைப் புயல் வடிவேலு.
நீண்ட இடைவெளிக்கு பிறகு முற்றிலும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் தோன்றவிருக்கும் திரைப்படம் தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் என்ற திரைப்படம். பிரபல நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இருந்து அவ்வப்பொழுது வெளியாகும் பல புகைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் இதுவரை பல பாடல்களை பாடியுள்ள வடிவேல் அவர்கள் முதல் முறையாக ஏ.ஆர் ரகுமான் அவர்களுடைய இசையில் மாமன்னன் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
ராசா கண்ணு என்கின்ற அந்த பாடல், வைகை புயல் வடிவேலு அவர்களுடைய குரலில் இன்று மாலை மாமனின் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலாக வெளியாக உள்ளது. இந்த பாடலை கேட்க பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.