படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாநாடு’ படக்குழு!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன.

சென்னை, புதுச்சேரி, பொள்ளாச்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திவந்தது. கொரோனா பரவல் காரணமாக தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குநர் வெங்கட் பிரபு.

cinema news in tamil

இந்த நிலையில் ‘மாநாடு’ படத்திற்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இறுதிக்கட்டப் பணிகளை விரைந்து முடித்து, படத்தை விரைவில் திரைக்குக் கொண்டுவரும் திட்டத்தில் படக்குழு உள்ளதாகக் கூறப்படுகிறது.