Search
Search

மாதவன், சித்தார்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் – வேற லெவல் Comboவில் இணைந்த நடிகர்!

மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா ஆகிய மூவரின் நடிப்பை தனி தனியே பார்த்திருப்போம் ஆனால் மூவரும் ஒன்றாக இணைந்தால் என்னவாகும். அப்படி உச்சகட்ட எதிர்பார்ப்புடன் உருவாக உள்ள திரைப்படம் தான் TEST.

நேற்று முன்தினம் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது, முதல் முறை இயக்குநராக அறிமுகமாகும் சஷிகாந்த் மிக நேர்த்தியாக இந்த கதையை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவாவின் தமிழ் படம் துவங்கி சமுத்திரக்கனியின் தலைக்கூத்தல் படம் வரை பல வெற்றி படங்களை கொடுத்த Y NOT Studios நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தில் இன்னொரு முக்கியமான நடிகர் களமிறங்கியுள்ளார். அவர் தான் பிரபல நடிகர் காளி வெங்கட். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கும் காளி வெங்கட் இங்த படத்தில் இணைந்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது, மேலும் மாதவன் நடிப்பில் GD நாயுடு படமும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

You May Also Like