இந்தியாவுக்கு 5 தங்கம்.. வாழ்த்து மழையில் நனையும் மாதவனின் மகன் – கேப்டன் போட்ட ட்வீட்!

திருவள்ளுவர் அறத்துப்பாலில் ஒரு குரல் அமைத்திருப்பார் “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்”. அந்த குரலின் பொருள்பட வாழ்ந்து வரும் ஒரு இளைஞன் தான் வேதாந்த், அவருடைய முழுப்பெயர் வேதாந்த மாதவன்.
மாதவன், நடிப்பில் உச்சம் பல கண்ட ஒரு சிறந்த நடிகர், ஆனால் தன் மகன் மீது அந்த வாசம் படாமல் வளர்த்து வந்துள்ளார். ஏற்கனவே வேதாந்த், நீச்சல் போட்டிகளில் வாங்கிய பதக்கங்கள் பல, இந்நிலையில் மேலும் 5 தங்க பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் (வயது 17) 50, 100, 200, 400 மற்றும் 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்று, 5 தங்கங்களை வென்றுள்ளது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே பல்வேறு துறையை சேர்ந்த நட்சத்திரங்களும் வேதாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல நடிகரும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த், வேதாவை மனதார பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.