மகான் திரை விமர்சனம்
விக்ரம், துருவ் விக்ரம்,சிம்ரன், பாபி சிம்ஹா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகான். இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மகான் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

படத்தின் கதை 1968ல் இருந்து பயணிக்கிறது. ஆடுகளம் நரேன் சாராயக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். தனது மகன் விக்ரமை காந்தி போல ஒரு மகானாக வளர்க்கவேண்டும் என விரும்புகிறார். ஆனால் விக்ரம் சிறு வயது நண்பர்களுடன் சேர்ந்து குடி, சூதாட்டம் என திரிகிறார். விக்ரம், பாபி சிம்ஹா இருவரும் தமிழ் நாட்டில் மது வியாபாரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்
இதன் காரணமாக விக்ரமின் மனைவி மற்றும் மகன் விக்ரமை விட்டு பிரிகிறார்கள். சில ஆண்டுகள் கழித்து காவல் அதிகாரியாக வரும் துருவ் விக்ரமிற்கும், விக்ரமிற்கும் நடக்கும் மோதலில் யார் வென்றார்கள் என்பதுதான் படத்தின் கதை.
காந்தி மகான் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் சண்டை காட்சிகள் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் தூள் கிளப்பியுள்ளார்.
துருவ் விக்ரம் மற்றும் சிம்ரன் தங்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். விக்ரமின் சிறுவயது நண்பராக வரும் பாபி சிம்ஹா சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மற்றும் ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் சேர்த்துள்ளது.
மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை படம் பேசியிருக்கிறது. சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
