Search
Search

ஆங்கில பாடலை நேர்த்தியாக பாடும் மக்கள் இசை கலைஞர் – Taylor Swift போல மாறிய ராஜலக்ஷ்மி

மக்கள் இசை கலைஞர்கள் அனைவருமே நமது மண்ணின் சொத்து என்றே கூறலாம், அந்த வகையில் ராஜலக்ஷ்மி மற்றும் செந்தில் கணேஷ் ஜோடி ஒரு அற்புதமாக கலைக்குடும்பம். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர்கள் தற்போது வெள்ளித்திரையிலும் அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கிராமிய மன்வாசனையோடு பல நாட்டுப்புற பாடல்கள் மற்றும் திரை இசை பாடல்களை பாடிவரும் இந்த ஜோடி தற்போது ஒரு புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஆங்கிலம் கற்றுக்கொண்டு வந்த ராஜலக்ஷ்மி தற்போது ஆங்கில பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார். அதுவும் உலக புகழ் பெற்ற பாடகி டெய்லர் ஸ்விப்ட் அவர்களின் “வில்லோ” (Willow) பாடலை பாடி அசத்தியுள்ளார்.

உண்மையில் ஆங்கில மொழியை புதிதாக கற்று, அதன் ஏற்ற இறக்கங்களை சரியாக உச்சரித்து இந்த பாடலை நேர்த்தியாக பாடியுள்ளார் ராஜலக்ஷ்மி. சபாஷ்

You May Also Like