பெண்களே உஷார்… பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து பணம் கேட்டவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ரோகித் என்ற நபர் ஒரு பெண்ணிடம் முகநூல் பக்கத்தில் நண்பராகியுள்ளார். பின்னர் அவருடைய புகைப்படத்தில் முகத்தை மட்டும் மார்ப்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்துள்ளார். அதனை அவருடைய கணவரிடம் காட்டி ரூ.20,000 கேட்டு மிரட்டியுள்ளார். இந்த செய்தி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் அவர்களின் பிரத்தியேக வாட்ஸ் அப்பில் ரகசிய தகவல் கிடைத்தது.

காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில், குற்றவாளி ரோகித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து பல்வேறு விதமான ஆபாச புகைப்படங்களும் கணினி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் கைப்பற்றப்பட்டது. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சித்த குற்றத்திற்காக பல்வேறு வழக்குகள் ரோகித் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.