யார் சாமி இவன்? கழுத்துல ஸ்கேன் பண்ணுங்க.. Insta-வ பாருங்க..!

கொலம்பியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது கழுத்துப்பகுதியில் தனது இன்ஸ்டாகிராமின் QR கோடை tattoo-வாக பதிவிட்டு அதனை புகைப்படமாக தனது இண்டாகிராம் பக்கதில் பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த QR CODE ஸ்கேன் ஆகுமா? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

அந்த கேள்விக்கு பதில் கூறும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தனது கழுத்து பகுதியில் உள்ள QR CODE-யை ஸ்கேன் செய்தார். அது அவரது இண்டாகிராம் பக்கதிற்கு சென்றது. அதன் பின் சில நாட்களுக்கு பிறகு அந்த QR CODE ஸ்கேன் செய்த போது ஸ்கேன் ஆகவில்லை. அதற்கு கராணம் நிறம் மாற்றம். தோல் வளர்ச்சியே முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement