மன அழுத்தம் குறைய எளிய வழிகள்

மன அழுத்தம் ஒரு மனிதனை எந்த நேரமும் தாக்கலாம். இந்த மன அழுத்தம் தூக்கமின்மையில் தொடங்கி, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் என ஒவ்வொன்றாக பல பிரச்னைகளை கொண்டுவரும்.

மன அழுத்தத்தை குறைக்கும் சில வழிகளை இங்கு பார்ப்போம்.

மூச்சுப்பயிற்சி

Advertisement

அதிகாலையில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து, கண்களை மூடிக்கொண்டு ஆழமாக மூச்சை இழுத்து, மெதுவாக வெளியேவிடவும். இந்தப் பயிற்சியை 5-ல் இருந்து 10 நிமிடங்களுக்குச் செய்யலாம். இதனால் இதய துடிப்பு சீராக இருக்கும். ரத்த அழுத்தம் குறையும். மனஅழுத்தம் நீங்கும்.

mana alutham kuraiya tips

பிடித்த இசையை கேட்கலாம்

அமைதியான இசை, உங்களுக்கு பிடித்த பாடல்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் பார்ப்பதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். நாம் ரசித்துக் கேட்கும் மெல்லிய இசை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதயத் துடிப்பைச் சீராக்கும். பதற்றம், கவலைகளைக் குறைக்கும் என பல ஆய்வுகள் சொல்லியிருக்கின்றன.

நடைப்பயிற்சி

எப்போதும் ஒரே இடத்தில் அமர வேண்டாம். மாலை நேரங்களில் இதமான காற்றுடன் நடைப்பயிற்சி செய்வது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும்.

சாக்லேட்

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை டார்க் சாக்லேட் (1.4 அவுன்ஸ்) சாப்பிடுவது, மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன்களைக் குறைக்க உதவும்’ என்கிறது ஓர் ஆய்வு.

சமூக வலைத்தளங்களில் கவனம்

தற்போது பேஸ்புக், டிக் டாக் போன்ற தளங்களில் போடப்படும் சில மோசமான பதிவுகள் கூட டென்ஷன், மன அழுத்தத்தை உருவாக்கும். அதெயெல்லாம் தவிர்த்து விட்டு நல்ல பதிவுகளை பார்ப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.

தியானம் மற்றும் யோகா

யோகாசனப் பயிற்சிகள் தியானம் செய்வது போன்ற பழக்கவழக்கங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்

புத்தகம் வாசிப்பது

உங்களுக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இருந்தால், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட புத்தகத்தை படிக்கலாம். அவ்வாறு படிக்கும் போது மனதிற்கு நிம்மதி ஏற்படும். பேய் கதைகள், க்ரைம் ஸ்டோரி போன்ற புத்தகத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தன்னம்பிக்கை கதைகள், நீதிக்கதைகள், தொழிலதிபர்கள் வரலாறு இதுபோன்ற புத்தகங்களை படிக்கலாம். இதனால் நமக்கு ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். மன சோர்வு, மன அழுத்தம் நீங்கும்.

இந்த வழிகளை நாம் பின்பற்றி வந்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

உங்களுக்கு தேவைப்பட்டால் மன நல ஆலோசகரை அணுகி பயன்பெறலாம்.