மாங்காய், மாம்பழம் மட்டுமல்ல அதன் மர இலைகள் கூட ஏராளாமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
மாவிலையில் விட்டமின்கள் A,B,C,E ஆகியவை இருக்கின்றன. அத்துடன் எதில் அசிடேட், அல்கலாய்டு, டேனின், கில்கோசிட், மேக்னஃப்ரின், ஃபேலவனாய்டு, பீட்டாகரோட்டி, டயட்டரி ஃபைபர், மக்னீசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன.
மாவிலையின் பயன்கள்
மா இலை பொடியை நீரில் கரைத்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் விரைவில் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற்றப்படும்.
சளி மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்க பட்டவர்களுக்கு மா இலைகள் சிறந்த தீர்வாக இருக்கிறது.
மா இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி அதனை தண்ணீரில் கலந்து குடித்தால் தினமும் இரண்டு முறை குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
மா இலையை எரித்து அந்த சாம்பலை காயம் பட்ட இடத்தில் பூசினால் எரிச்சலை கட்டுப்படுத்தி காயத்தை குணப்படுத்தும்.
மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?
மாவிலை தோரணம் மங்கலத்தின் அடையாளம். சுபநிழச்சியின் வரவேற்பு சின்னம். அதனை பார்த்தால் மனதில் சந்தோசம் ஏற்படும்.
மாவிலை தோரணம் கட்டுவதில் ஒரு அறிவியல் ரகசியம் உள்ளது. அந்த அறிவியல் ரகசியம் தெரியுமா? அது, பொதுவாக மரத்தில் இருக்கும் இலைகள் ஆக்சிஜனை வெளியிடும், ஆனால் உதிர்ந்தால் அது நின்றுவிடும். ஆனால், மாவிலை மரத்தில் இருந்து பறித்த பின்னும் ஆக்சிஜனை வெளியிடும்.
அது சுபநிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு சுவாசத்து உதவும். இதனால்தான், நம் முன்னோர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு மாவிலை தோரணம் கட்டினார்கள்.