Search
Search

அடுத்த ப்ராஜெக்ட் ரெடி.. 36 ஆண்டுகள் கழித்து இணையும் வெற்றிக்கூட்டணி!

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகி முடித்த பிறகு இணயக்குநர் மணிரத்தினம் தனது அடைத்த படிப்புக்கு தயாராக உள்ளார்.

1987ம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது நாயகன் படம் வெளியாகி சுமார் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலக நாயகன் கமல் அவர்களுடன் மணிரத்தினம் இணைய உள்ளார் .1983ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான பல்லவி அனுப்ப பல்லவி என்ற திரைப்படம் தான் இவர் எழுதி இயக்கி வெளியிட்ட முதல் திரைப்படம்.

அதன் பிறகு 1985ம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான பகல் நிலவு என்ற திரைப்படம் தான் இவர் தமிழில் எழுதி, இயக்கி வெளியிட்ட முதல் திரைப்படம். அதனைத் தொடர்ந்து மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பாம்பே மற்றும் இருவர் என்று இவர் இயக்கி எழுதி வெளியிட்ட அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.

ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கியுள்ள இவர் கடந்த 2018ம் ஆண்டு செக்கச்சிவந்த வானம் என்ற திரைப்படத்தை தமிழில் உள்ள முன்னணி கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளை கொண்டு இயக்கி வெளியிட்டார்.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து இவர் உலகநாயகன் கமல் அவர்களுடன் இணையவிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்திற்கான ப்ரமோஷன் காட்சிகள் மே மாத வாக்கில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

You May Also Like