இவர் கையில துப்பாக்கி.. அவர் கையில கத்தி – மாரி செல்வராஜ் பட First Look வெளியீடு!

இயக்குநர் மாரி செல்வராஜின் நீண்டகால கனவு திரைப்படம் தான் மாமன்னன், குறிப்பாக இந்த திரைப்படத்தை வடிவேலு அவர்களை வைத்து எடுக்க வேண்டும் என்று பல நாட்கள் காத்திருந்து, சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக கதை எழுதி, அதை தற்போது படமாக்கி உள்ளார்.
இந்த படத்தில் பிரபல நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் மற்றும் சூப்பர் ஹிட் மலையாள நடிகரான பாஹ்த் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் வைகைப்புயல் வடிவேலு முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
நேற்று வெளியான 2 போஸ்டர்களிலும் வடிவேலு அவர்களுடைய கதாபாத்திரம் குறித்து நிறைய விஷயங்கள் இணையத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள First Look போஸ்டரில் வடிவேலு மற்றும் உதயநிதி அருகருகே அமர்ந்திருக்க வடிவேலு கையில் துப்பாக்கி, உதயநிதி ஸ்டாலின் கையில் கத்தியும் உள்ளது.
கரை வேட்டியில் இருக்கும் வடிவேலு ஒரு அரசியல்வாதியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் என்ற யுகங்களும் தற்பொழுது இணையத்தில் வலம் வருகிறது. என்ன இருப்பினும் கதையின் ஓட்டம் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.