“என் பிள்ளைகளுக்காக பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன்”.. மார்க் ஆண்டனி பட விழாவில் விஷால்

மார்க் ஆண்டனி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்திருக்கும் திரைப்படம். இது ஒரு Period Film, அதாவது 70களுடைய பிற்பாதியில் நடப்பது போன்ற நிகழ்வுகளை கொண்ட ஒரு திரைப்படம்.
விஷால் இந்த முறை 3 கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க, எஸ்.ஜே. சூர்யா அவர்கள் இரட்டை வேடம் போட்டு நடித்துள்ளார். பெரிய அளவில் இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மகளீர் தினத்தன்று இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஒரு கல்லூரியில் வைத்து வெளியிட பட்டது.
அந்த கல்லூரில் விஷாலின் தேவி அரக்கட்டையிம் மூலம் பயன்பெரும் பல பெண்கள் பயின்று வருகின்றனர். அங்கு பேசிய விஷால், என் பிள்ளைகள் பலர் இங்கு படிக்கின்றனர், நான் ஒவ்வொரு முறை அவர்களுக்கு சீட் கேட்டு இங்கு வரும்போது இந்து கல்லூரி நிர்வாகம் என்னை ஏமாற்றியதே இல்லை.
தேவைப்பட்டால் என் பிள்ளைகளின் படிப்புக்காக நான் பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். மாணவிகளின் ஆர்பரிப்புக்கு மத்தியில் அன்று அந்த மோசடின் போஸ்டர் வெளியானது.