போஸ்டர்ல இருக்கிறது யாருனு தெரியுதா?.. மார்க் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட்!

தமிழ் திரையுலகை பொருத்தவரை அவ்வப்போது வித்தியாசமான இரு நட்சத்திரங்கள் ஒன்றாக தோன்றி நடிப்பது சமீப காலமாக இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் புரட்சி தளபதி விஷால் மற்றும் இயக்குனராகவும் மிகச் சிறந்த நடிகராகவும் வலம் வரும் எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.
ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்க, 80களுக்கு முற்பட்ட காலத்தில் நடக்கின்ற ஒரு கதை களத்தில் இவர்கள் நடித்துள்ளனர். விஷால் மூன்று கதாபாத்திரங்களிலும், எஸ்.ஜே சூர்யா இரண்டு கதாபாத்திரங்களிலும் தோன்றிய இந்த படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே இந்த படம் குறித்த தகவல்கள் அப்பொழுது வெளியாகி வருகிறது, குறிப்பாக எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷால் அவர்களுடைய வித்தியாசமான தோற்றமே இந்த படத்திற்கு பாதி பலம் என்று கூறலாம்.
இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 27ம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது என்ற தகவலையும் ஒரு புதிய போஸ்டரையும் இந்த படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. உண்மையில் எஸ்.ஜே சூர்யா நரைத்த தலையும், தாடியுடன் கையில் துப்பாக்கியுடன் நிற்கும் அந்த போஸ்டர் தற்பொழுது வைரலாகி வருகிறது.