Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

மார்ஷா பி. ஜான்சன் பற்றி சில தகவல்கள்

தெரிந்து கொள்வோம்

மார்ஷா பி. ஜான்சன் பற்றி சில தகவல்கள்

மார்சா பி. ஜான்சன் என்பவர் ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக 1960-களிலே குரல் எழுப்பியவர்களில் முக்கியமானவர். இந்த முக்கியமான நபரை Google Doodle வைத்து இன்று (June 30) மரியாதை செலுத்தி வருகிறது. இதனை Los Angeles-ஐ சேர்ந்த guest artist Rob Gilliam என்பவர் வரைந்த ஓவியம் ஆகும்.

Marsha P. Johnson என்பவர் யார்?

Marsha P. Johnson ஆப்பிரிக்க – அமெரிக்காவை சேர்ந்த ஒரு திருநங்கையாவர். இவர், திருநங்கைகளின் உரிமைக்காக போராடியது 1960 மற்றும் 1970 களில் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அந்த காலக்கட்டத்தில் ஓரின சேர்க்கையாளர்களை இந்த சமூகம் அதிகம் கொடுமைக்கு உள்ளாக்கிய காலம் அது. அமெரிக்கர்களால் இது ஒரு மன நோய் என அழைக்கப்பட்டது.

history of marsha p johnson

Marsha P. Johnson பற்றி…

இவர் August 24, 1945 ஆண்டு New Jersey-யில் பிறந்தார், அவரது பெற்றோர் வைத்த பெயர் Malcolm Michaels Jr. இவருக்கு உடன் பிறந்தோர் மொத்தம் ஏழு பேர். பள்ளிப்படிப்பு முடிந்து 1963-ல் New York City-க்கு குடிபெயர்ந்தார். பிற்காலத்தில் சட்டப்பூர்வமாக Marsha P. Johnson என பெயர் மாற்றிக்கொண்டார்.

போராட்டத்திற்கு காரணம்…

1969-ல் The Stonewall Inn. என்ற கே பாரில் New York போலீசார் சோதனை நடத்தி அங்கு இருந்த 200 மேற்பட்ட நபர்களை பாருக்கு வெளியில் இழுத்து வந்து கடுமையாக தாக்கியுள்ளனர். Marsha P. Johnson-க்கு அப்போது 23 வயது. அங்கு இருந்த சிலர் போலீசாருக்கு எதிராக போரட்டத்தில் ஈடுபட்டனர். அதில் Marsha P. Johnson-ம் ஒருவர். அதன் பிறகு ஓரின சேர்க்கையாளர்கள் தங்களின் உரிமைக்காக போராட்டம் நடத்த தொடங்கினர். இது உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு 2019-ல் New York போலீஸ் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

இயக்கம் தொடங்கியது….

மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு Marsha P. Johnson, Gay Liberation Front மற்றும் Street Transvestite Action Revolutionaries என்ற இயக்கத்தை தனது நெருங்கிய நண்பன் Sylvia Rivera சேர்ந்து தொடங்கி அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார். பிறகு 1987 முதல் to 1992 வரை AIDS குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தார். இவர் 6 July 1992 ஆண்டு இறந்தார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தெரிந்து கொள்வோம்

Advertisement
Advertisement
To Top