Search
Search

மருத திரை விமர்சனம்

ராதிகா சரத்குமார், விஜி சந்திரசேகர், ஜி.மாரிமுத்து, சரவணன், வேல ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Marutha tamil movie review

ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு ராதிகாவின் அண்ணன் சரவணன் செய்முறை செய்கிறார். அதன் பிறகு சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தார் செய்முறை எதுவும் செய்யாமல் விடுகின்றனர். இதனால் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர் கோபம் அடைகிறார். அந்த கோபத்தில் ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்துகிறார். அதில் அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

இதன் பிறகு சரவணன் குடும்பத்திற்கும் ராதிகா குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் விஜி சந்திரசேகர் மகளும் ராதிகாவின் மகனும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு இவர்களின் குடும்பம் இணைந்ததா? ராதிகாவின் மகன், விஜியின் மகள் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் இயக்குனர் ஜி.ஆர்.எஸ் படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார். பாரதிராஜாவின் உதவியாளரான ஜி.ஆர்.எஸ் பாரதிராஜா பாணியிலேயே படத்தை இயக்கியிருக்கிறார். கிராமங்களில் திருமண நிகழ்ச்சி, காதுகுத்து நிகழ்ச்சிகளில் நடக்கும் செய்முறையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார்.

ராதிகாவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அண்ணன் பாசம், தாய் பாசம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். இவருக்கு இணையாக விஜி சந்திரசேகரும் நடித்துள்ளார்.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பட்டுக்கோட்டை ரமேஷின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அப்படியே காட்டியுள்ளது.

மொத்தத்தில் ‘மருத’ கிராமத்து விருந்து

Leave a Reply

You May Also Like