in

மாஸ்டர் படம் ரிலீசாகினால் இவ்வளவு பெரிய ஆபத்தா..? ரசிகர்களே உஷார்..!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காரணத்தால், கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன்காரணமாக, பல்வேறு முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் கிடப்பில் உள்ளது.

சூரறைப்போற்று, மாஸ்டர், ஜகமே தந்திரம் ஆகிய பல்வேறு முக்கிய படங்கள் கிடப்பில் உள்ளதால், ரசிகர்களும் சோகமாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான கேயார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஊரடங்கு முடிந்த பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படத்தை வெளியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு காரணமாக அவர் குறிப்பிட்டது என்னவென்றால், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களின் படம் வெளியாகினால், கூட்டம் கூட்டமாக சென்று ரசிகர்கள் திரையரங்கிற்கு செல்வார்கள்.

இதன்காரணமாக சமூக விலகல் கடைப்பிடிக்கப்படாமல் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.