Search
Search

எதிர்நீச்சல் போடும் மஹேந்திரன்.. வெளியானது ரிப்பப்பரி டீஸர் – இது “காஸ்ட் கோஸ்ட்” கதை

சினிமாவை தன் வசப்படுத்திக்கொள்வது என்பது மிக மிக கடுமையான விஷயங்களில் ஒன்று என்பதை கடந்த நூறாண்டு காலமாக அது நிரூபித்து வருகிறது. அந்த வகையில் இந்த சினிமா மீது தீராக்காதல் கொண்ட பலர், பல வருடங்களாக போராடியும் அது இன்னும் அவர்களுக்கு முழுமையாக வசப்படவில்லை என்றே கூறலாம்.

சிறு வயது முதலேயே சினிமாவில் பெரிய அளவில் சாதித்து விட வேண்டும் என்று எதிர்நீச்சல் போட்டு வரும் ஒரு சிறந்த நடிகர் தான் மாஸ்டர் மகேந்திரன். நாட்டாமை படத்தில் வந்த இந்த சிறுவனை (அப்போது) நம் யாராலும் மறக்க முடியாது.

தான் நடித்த இரண்டாவது திரைப்படத்திலேயே தமிழக அரசு வழங்கும் மாநில விருதை பெற்ற ஒரு குழந்தை நட்சத்திரம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 ஆண்டுகளாக, இன்னும் சொல்லப்போனால் தனது இரண்டாவது வயதில் இருந்தே இந்த சினிமா உலகை தன் வசப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற வெறியோடு செயல்பட்டு வரும் ஒரு நடிகர்.

இவருடைய இளமையை பருவத்தில் அவர் நடித்து வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தரவில்லை என்ற பொழுதும் இவருடைய தேடல் இன்றளவும் குறையவில்லை. மாஸ்டர் படம் சில விமர்சனங்களுக்கு உள்ளானபோதும், இளைய பவானியாக இவர் நடித்தது பெரும் பாராட்டை பெற்றது.

இந்த 2023ம் ஆண்டு அவருடைய ரிப்பப்பரி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் Kara மற்றும் Amigo Garage என்ற இரு படங்கள் படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ரிப்பப்பரி படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

வித்தியாசமான (பேய்) கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது என்றே கூறலாம், இந்த படத்தை அருண் கார்த்திக் இயக்க தியாகராஜன் இசையமைத்துள்ளார். தொடர்ந்து எதிர்நீச்சல் போடும் மஹேந்திரனுக்கு ரிப்பப்பரி வெற்றியடைய வாழ்த்துக்கள்

You May Also Like