in

விஜய் பிறந்தநாளன்று மாஸ்டர் டீசர்..! ரிலீஸ் தேதி எப்ப தெரியுமா..?

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விஜயின் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.

விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தில், ஆண்ட்ரியா, சாந்தனு உட்பட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 9-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் டீசரை விஜய் பிறந்தநாளன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.