700 விவசாயிகளின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் : டெல்லி முதல்வர் கருத்து.

குருநானக் ஜெயந்தியை ஒட்டி பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.

latest tamil news

இம்மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்ததற்கு விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதனை வரவேற்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் வேளாண் சட்டங்களை முன்பே ரத்து செய்திருந்தால் 700 விவசாயிகளின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.

Advertisement

போராட்டம் காரணமாக மூன்று சட்டங்களை அரசு திரும்பப் பெறுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.