மே மாதம் ராசி பலன்கள் 2021

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பல நல்ல முடிவுகளை தரும். உங்கள் பணியின் வேகம் அதிகரிக்கும். உங்கள் ராசியின் 10-வது வீட்டில் சனிபகவான் அமர்ந்திருப்பதால் கடின உழைப்பின் மூலம் நல்ல பலனை தருவார். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். ஐந்தாவது வீட்டில் குரு பார்வை இருப்பதால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்

Advertisement

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொழில் ரீதியாக பல நன்மைகள் தரும். பணிபுரியும் இடத்தில் வெற்றியை தரும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுக்கிரன்,புதன் ராகு ராசியில் இணைந்து மன நிம்மதியை தருவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களில் வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையில் இடமாற்றம் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம். மாத இறுதியில் திருமணம் சுப காரியம் தொடர்பாக முயற்சி செய்யலாம். வாகனங்கள், சொத்துக்கள் வாங்கும்போது அவசரம் வேண்டாம். தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலில் அன்னதானம் செய்யலாம்.

கடகம்

கடகராசிக்காரர்களுக்கு 12வது வீட்டில் செவ்வாய் இருப்பதால் சில தடைகள் ஏற்படும். இதனால் தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. குடும்ப ஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு முயற்சி எடுக்கலாம். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கண்டகச் சனி இருப்பதால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் வந்துபோகும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். காரமான உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தடைகள் நீங்கி நல்ல காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுக்கும் முயற்சிகள் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தேவையான பண உதவியும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக முயற்சி எடுப்பார்கள். பிரதோஷ காலத்தில் சிவனை வணங்கி வந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் இருந்து வந்த வீண் மன சஞ்சலம் தேவையற்ற செலவு ஆகியவை நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடு செய்யும்போது கவனம் தேவை. வியாபாரம் தொழில் மூலம் செலவுகள் குறையும். பெண்களுக்கு கடன் பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து போகும்.
மாணவர்கள் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விட்டு பாடத்தில் கவனம் செலுத்துவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக யோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை தள்ளிப் போடுங்கள். பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய பதவிகள் அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சகம்

விருச்சக ராசிகாரர்கள் தங்களுடைய திறமையான பேச்சு மூலம் காரிய வெற்றி அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் அல்லது உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகளும் கூடுதல் வருமானமும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து நவகிரகத்தில் உள்ள செவ்வாய் பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எல்லா நன்மையும் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த விஷயங்கள் திருப்திகரமாக நடந்து முடியும். கடன் சுமை குறையும். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் கடின முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் உங்களது பேச்சின் மூலம் பலருக்கு உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் காணப்படும். உங்கள் செயல்களில் இருந்துவந்த தடை நீங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுப காரியங்களில் சிறுசிறு தடைகள் உருவாகலாம். சனிக்கிழமைகளில் விநாயகருக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் காரிய தடைகள் நீங்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு எடுத்த எல்லா காரியங்களும் நல்ல விதமாக நடந்து முடியும். பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். பல வகையிலும் முன்னேற்றம் ஏற்படும். செவ்வாய் சஞ்சாரத்தால் சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறி நிலை ஏற்படும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சற்று மந்தமான நிலை காணப்படும். செலவும் அதிகரிக்கும். பணி நிமித்தமாக பயணம் ஏற்படும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உருவாகும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் மனதில் நம்பிக்கை பிறக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகளை எளிதில் வெல்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். கடன் தொல்லை நீங்கும். தொழில் ரீதியாக பயணங்கள் ஏற்படும். கடினமான பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்கள் நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க முயற்சி எடுப்பார்கள். ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கும். குலதெய்வத்தை வணங்கி வந்தால் எல்லா காரியமும் வெற்றியாக முடியும்.