திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் மயில்சாமி செய்த காரியம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி பெட்ரோலை பரிசாக வழங்கியுள்ளார்.

பெட்ரோல் என்பது தங்கம் போன்றாகிவிட்டது. தினமும் பெட்ரோல், டீசல் விலையை பார்த்து வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு மணமக்களுக்கு இரண்டு கேன் பெட்ரோலை பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.

Advertisement
latest tamil news

இதுபற்றி மயில்சாமி கூறியிருப்பதாவது “பெட்ரோல் விலை உயர்வு குறித்த மக்களின் கோரிக்கையை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவே இப்படி செய்தேன். பெட்ரோல் விலை மீதான வரியை குறைத்த தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறேன்” என்றார்.

மணமக்களுக்கு விலை உயர்ந்த பொருளை பரிசாக அளித்திருக்கிறார். மயில்சாமி நிச்சயம் பெரிய பணக்காரர் தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.