மயில் இரு கால்களை மட்டும் தரையில் ஊன்றி தோகை விரித்து ஆடுவது போலே நாமும் இரு கைகள் மட்டும் ஊன்றி உடல் முழுவதும் முழங்கைகளின் ஆதரவில் இருப்பதனால் இதற்கு மயிலாசனம் என்ற பெயரும் உண்டு.
மயூராசனம செய்முறை தரைவிரிப்பில் மண்டியிட்டு அமர்ந்து உள்ளங்கைகளையும் தரையில் ஊன்றி முழங்கைகளை நிலைக்கச் செய்யவும். கை விரல்களை முட்டுப் பக்கம் பார்க்குமாறு வைத்து, இரு முழங்கால்களும் தரையில் மண்டியிட்டு கொள்ளவும்.
சுவாசத்தை உள்ளிழுத்து நிறுத்தி தலை, மார்பை முன்புறம் நீட்டி வயிற்றை முழங்கைகளின் மேல் அமரச் செய்யவும். பின்னர் ஒவ்வொரு கால்களாக பின்புறம் நீட்டி இரு கால்களையும் ஒன்றாகச் சேர்க்கவும். பின்னர் கால்களையும் ஒன்றாகச் சேர்க்கவும். பின்னர் கால்கனை உயரே தூக்கி ஆசன நிலைக்கும் வரவும். சுவாசம் முழுவதும் உள்ளே இருந்தால்தான் உடல் முழுவதையும் விறைத்து நீட்ட எளிதாக இருக்கும்.
பார்ப்பதற்கு அந்தரத்தில் இருப்பதுபோல் தோன்றும். பிறகு கால்களை ஊன்றி சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டு எழுந்துவிடவும். இதுவே மயூராசனம் ஆகும். ஆரம்பத்தில் ஆறு வினாடிகளும் பழக பழக இரண்டு நிமிடங்கள் வரை ஆசனத்தில் நிலைத்து நிற்கலாம்.
மயூராசனத்தின் பலன்கள்
- உடலின் அனைத்து நரம்புகளும் பலம் பெரும்
- வயிற்றில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும்
- அஜீரண கோளறை போக்கும்
- உடல் கம்பிரத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
மேலும், அனைத்து யோகாசனங்கள் மற்றும் அதன் பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.