நான் இங்கேயே குத்திட்டு செத்துருவேன்…மீரா மிதுன் கதறல்

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சர்ச்சை நாயகி மீரா மிதுன் கேரளாவில் இன்று கைது செயயப்பட்டார்.

நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதுதான் இவருடைய வேலை. இவர் சமீபத்தில் பட்டியலின மக்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. மேலும் அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்களை திரை துறையை விட்டு நீக்க வேண்டும் எனவும் பேசினார். 3

அவரின் இந்த பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல்துறையினர் மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisement

நேரில் ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பினார். விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் தலைமறைவு ஆகியிருந்தார் மீரா மிதுன். அதோடு, “என்னைத் தாராளமாகக் கைது செய்துகொள்ளுங்கள், காந்தி, நேரு எல்லாம் சிறைக்குச் செல்லவில்லையா என்ன? என்னைக் கைது செய்வது நடக்காது. அப்படி நடந்தால் அது கனவில் மட்டுமே நடக்கும் என்று திமிராக பேசினார்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுனை கேரளா போலீசார் உதவியுடன் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரை கேரளாவிலிருந்து சென்னை அழைத்து வரும் வேலையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நான் இங்கேயே குத்திட்டு செத்துருவேன்.. முதலமைச்சர் அவர்களே, பிரதமர் மோடி அவர்களே, இந்த தமிழ்நாடு போலீஸ் என்ன ரொம்ப டார்ச்சர் பன்றாங்க என்று அவர் கதறும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.