வாய் தவறி தெரியாம பேசிட்டேன், ஜாமீன் கொடுங்க : மீரா மிதுன் மனு தாக்கல்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கேரளாவில் கைது செய்தனர். பிறகு சென்னைக்கு வரவழைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டார்.

வன்கொடுமை தடை சட்டத்தில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தன்னைப் பற்றி அவதூறாக பேசியவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி வாய் தவறி பேசியதாக கூறியுள்ளார்.

Advertisement

நான் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளேன். தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது. எனவே என்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விரைவில் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.