in

என் பணத்தை திருப்பிக்கொடு.. டிக்-டாக்கிடம் சண்டை போடும் மீரா..!

பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை மீரா மிதுன். சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகையான இவர், இணையத்தில் எப்போதும் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இதனால், நெட்டிசன்களிடம் சில சமயங்களில் வாங்கிக்கட்டியும் கொள்வார். இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் டிக்-டாக் குறித்து டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “நான் டிக்டாக்-கை பயன்படுத்தவில்லை. ஆனால் டிக்டாக் புரொஃபைலில் எனது பெயர், ஹேஷ்டாக் இருக்கிறது.

எனக்குத் தெரியாமல், எனது பெயர் மற்றும் புகழை சட்டவிரோதமாக டிக்டாக் செயலி பயன்படுத்தி இருக்கிறது. இதற்குச் சட்டரீதியான நடவடிக்கைக்கு டிக்டாக் தயாராக இருக்கட்டும்.

எனக்குத் தெரியாமல் சம்பாதித்த பணத்தைத் டிக்-டாக் திருப்பிக்கொடுக்க வேண்டும்.”

இவ்வாறு அந்த டுவீட்டில் தெரிவித்துள்ளார்.