Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன?

sama nokku naal meaning

ஆன்மிகம்

மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன?

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போடப்பட்டிருக்கும். அதற்கான அர்த்தம் என்ன என்பதை பாப்போம்.

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் மற்றும் சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது.
இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

மேல்நோக்கு நாட்கள்

ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள் மேல்நோக்கு நாட்கள். இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.

கீழ்நோக்கு நாட்கள்

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஆகிய ஒன்பது நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள் கீழ்நோக்கு நாட்கள் ஆகும். இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், செடிகளை பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்யலாம்.

சமநோக்கு நாட்கள்

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஆகிய ஒன்பது நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள் சமநோக்கு நாட்கள் ஆகும். இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், செல்லப் பிராணிகளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் அமைத்தல் ஆகிய பணிகளை செய்யலாம்.

தினசரி காலண்டர்கள் மூலமாக நீங்களே இந்த நாட்களை அறிந்து கொள்ளலாம்.அதில் மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று பதிவு செய்யப்பட்டு இருக்கும். அல்லது குறியீடு இருக்கும்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top