மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து : உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முப்படைத் தளபதி பிவின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததை தொடர்பாக ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் கடந்த 9ம் தேதி மதுரையில் கைது செய்யப்பட்டார். இவர் மீது போடப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அனுப்பியது போல் போலி மின்னஞ்சல் அனுப்பியதாக சென்னையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு செய்யப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகாரிக்க ஒரு குறிப்பிட்ட மதத்தினர்தான் காரணம் என வீடியோ வெளியிட்டதாக மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

Advertisement

மேலப்பாளையம் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாரிதாஸ் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் யூடியூபர் மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கினை முடித்து வைத்தார்.