மாணவர்களின் நினைவாற்றலை அதிரிக்கும் உணவுகள் எவை..?

மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் பற்றியும், அந்த பொருட்களின் மறைந்திருக்கும் மற்ற நன்மைகள் பற்றியும் இந்த கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம்.

மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள்:

நினைவாற்றல் குறைவாக உள்ள மாணவர்கள், உடலுக்கு தேவையில்லாத நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளை சாப்பிடலாம். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வருவது, தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு நல்ல பயனை தரும்.

கலப்படம் இல்லாத தேனை சாப்பிட்டு வந்தாலும், நினைவாற்றல் அதிகரிக்கும். நினைவாற்றல் மட்டுமின்றி, செரிமானம், மனதை ஒருமுகப்படுத்துதலுக்கு தேன் ஒரு சிறந்த உணவு ஆகும். தேனில் இருக்கும் பாலிபினால்கள், நரம்பு மண்டலத்தை பலப் படுத்தும் தன்மை கொண்டது.

நினைவாற்றலுக்கு உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருக்க வேண்டும். நன்றாக தூங்குவதும் அவசியமானது.

பொதுவாக மூளை செல்கள் சேதம் அடைவதே, நினைவாற்றல் குறையும் பிரச்சனையும் ஏற்படும். இதனை தடுப்பதற்கு, பூசணியின் விதைகளை நாம் சாப்பிட்டு வரலாம். இதன்மூலம், மூளையின் நரம்பு மண்டலம் நன்கு வலு பெறும்.

ஆரோக்கிய பானமாக கருதப்படும் கிரீன் டீயில் காபின் அதிகம் கலந்திருக்கிறது. மூளையில் ரத்தம் தடையின்றி செயல்பட அதிலிருக்கும் அமினோ அமிலங்கள் துணைபுரிகிறது. தேவையற்ற பதற்றம் ஏற்படுவதையும் அது தடுக்கும்.