பெண்களின் வாழ்வில் அந்த மூன்று நாட்கள்.. நடப்பது என்ன ?

0
230

மாதவிடாய் அல்லது மாத விலக்கு, ஒரு பெண்ணின் பருவயதில் அவள் அனுபவிக்கும் ஒரு புது வித விஷயமே இந்த மாதவிடாய். எப்போது முடியும் இந்த மூன்று நாட்கள் என்று காலத்தை கடத்தும் பெண்கள் பலர் உண்டு.

அதிக அளவிலான ரத்தப்போக்கு, உடல் சோர்வு, கை, கால் வலி என்று அந்த நாட்களில் பெண்கள் படும் பாடு சொல்லில் அடங்காது.

பழங்காலங்களில் மாத விலக்கு ஏற்பட்ட பெண்ணை வீட்டில் இருந்த தனிமை படுத்தினர், காரணம் ஏற்கனவே உடல் சோர்ந்து உள்ள அவளை மேலும் வேலை கொடுத்து வதைக்கக்கூடாது என்பதற்காகவே.

மாதவிலக்குடன் சேர்ந்து வயறு வலி ஏற்படுவது இயற்கையே, அதை நினைத்து வேதனையோ, கவலையோ அதிகம் அடைய தேவையில்லை, வயற்று வலி அதிமாக இருப்பின் நிச்சயம் மருத்துவரை அணுகலாம்.

பெண்கள் சிலருக்கு மாதத்தில் இரண்டு முறையோ அல்லது இரண்டு மாதத்தில் ஒரு முறையோ மாதவிலக்கு ஏற்படும். ஆனால் இந்த பிரச்னையை பெண்களால் எளிதில் தீர்த்துவிட முடியும்.

இது போன்ற நேரங்களில் அதிக அளவிலான ரத்த போக்கு இருப்பின் பெண்கள் சத்தான ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், கீரை, பாகற்காய், மீன் போன்றவை மிக சிறந்த உணவுகளாகும். இரும்புசத்து உடைய அணைத்து உணவுகளும் உகந்ததே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here