in

எத்தனை கோடிக்கு விற்பனையானது மாஸ்டர்..? தமிழ் சினிமாவை ஆளும் ஓடிடி தளங்கள்..!

கொரோனா பரவலின் காரணமாக, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால், பெரிய அளவிலான நிறுவனங்களே நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

ஆனால், நெட் பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஒடிடி தளங்கள் பெரும் லாபம் அடைந்து வருகின்றன. அந்த நிறுவனங்கள் மட்டுமின்றி, பல்வேறு தயாரிப்பாளர்களும் படத்தை ஒடிடியில் வெளியிட்டு லாபம் பார்த்து வருகின்றனர்.

அப்படி லாபம் என்ன பார்த்தார்கள் என்று கேட்டால், இதோ அதற்கான பதில். பொன் மகள் வந்தாள் படம் சுமார் 5.5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தை 5 கோடிக்கு அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.

மேலும், 1.5 கோடி ரூபாய் சேர்ட்டிலைட் ரைட்ஸ் மூலம் படக்குழுவிற்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் படக்குழுவிற்கு, ரூபாய் 1 கோடி வரை லாபம் கிடைத்துள்ளது.

இதுவே, படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்திருந்தால், படத்தின் பப்ளிசிட்டி தொடர்பான அத்தனை விஷயங்களையுமே படக்குழு தான் செய்திருக்க வேண்டும்.

படங்களை ஒடிடியில் விற்பதால், வேலை குறைவதோடு, உறுதியான லாபம் இருப்பதால், தயாரிப்பாளர்கள் இந்த தளங்களை தேர்வு செய்ய இருக்கின்றனர்.

இதற்கிடையே, மாஸ்டர் படமும், ரூபாய் 15 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்தாம். இதுவரை ஒடிடி தளங்களில் விற்கப்பட்ட தமிழ் படங்களில் இதுவே அதிகம் என்றும் கூறப்படுகிறது.

அதற்கு அடுத்த இடத்தில், ரூபாய் 14 கோடிக்கு, பிகில் படம் விற்கப்பட்டுள்ளதாம். இவ்வாறு தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தருவது மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் குறைவான அளவு செலவு வைப்பதால், அவர்களும் இதனை எதிர்பார்க்கின்றனர்.

இதை வைத்து பார்க்கும்போது, இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவை ஆளும் சக்தியாக ஒடிடி தளங்கள் மாறும் என்று நிச்சயமாக கூறலாம். ஆனால், இதனால் பாதிக்கப்படுவது திரையரங்கு உரிமையாளர்கள் தான் என்பது கசப்பான உண்மை…